Loading...
  • உடையார், பாகம் – 1
  • 20ஆம் பதிப்பு
  • MRP:₹350
  • விசா பப்பிளிகேஷன்

உடையார் உருவான விதம்

உடையார் வெறும் நாவல் இல்லை. தமிழகத்தினுடைய  வரலாற்று  பதிவும் இல்லை. கடவுள் நூல். ராஜராஜனின் உள்மன அலசல்.

எண்ணற்ற வாசக இதயங்களை உடையார், சோழ தேசத்தின் மீது காதல் உடையார், காவிரியின் மீது காமம் உடையார், என்றெல்லாம் உடையார் நாவல் மீது பித்து கொண்டு உடையார் புனைந்தவரை வர்ணிக்கிறார்களே அப்படி அதில் என்ன இருக்கிறது?

2733 பக்கங்கள் கொண்ட ஆறு பாகங்களை துளியும் சோர்வு இல்லாமல் வாசித்து முடித்தபோது, ஒருவிதமான கிளர்ச்சி மனம் முழுக்க திருப்தி அடையாத நிலை அந்த காவிய ஊற்றில் இருந்து இன்னும் பருக வேண்டும் என்ற சபலம் ஏற்படுகிறதே எதனால்?

வெண்தாடியை மென்மையாய் கோதியபடியே சோழதேசத்திற்குள்ளும் உள்மனதிற்குள்ளும் ஆரவாரமாய் பயணப்பட்டு விளக்குகிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.

நான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்ச நேரம். என் சித்தப்பா கூட, முதன்முறையாக  தஞ்சை  கோவிலுக்கு போறேன். “இது உனக்கு  பரிச்சயமான  இடம்தான்னு, மனசு சொல்லுது! இங்கே  சிவலிங்கம் இப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்படியே  இருக்குது”. அர்ச்சகர் இப்படி இருப்பார்னு நம்புறேன், அவரும் அப்படியே  இருக்கிறார். நிறைய  பேர்கிட்டே விசாரிச்சேன்.  யாருக்கும் ஒண்ணும் தெரியலை. இவ்வளவு பெரிய கோவில் ஆனா இதோட வரலாறு யாருக்கும் தெரிலையேங்கிற வருத்தம் ஏற்பட்டது. கோவிலை சுத்தி வரும் பொது இது ரொம்ப அனாதையாக இருக்கு இந்த கோவில் இப்படி இருக்க கூடாதுன்னு அழுதேன், ஆனா அந்த சமயத்துல கூட இந்த கோவிலைப்பத்தி எழுதனும் இதை நாவலாக்கனும்னு எனக்கு தோணலை.ஆனா தினமும் யோசிச்சேன். இதை எப்படி கட்டியிருப்பான்னு யோசிச்சேன். கல்வெட்டுகளை தேடி படிக்கணும் முடிவு பண்ணினேன்.

என் 27 வயசுலதான் முதல் கல்வெட்டு படிக்கிற வாய்ப்பு கிடைச்சுது . நான் கொடுத்தனவும், நம் மக்கள் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் என்கிற ஒரு கல்வெட்டை கையில் புத்தகம் வச்சுக்கிட்டு படித்துமுடித்தேன்.ரொம்ப சந்தோசமாக இருந்தது இப்படி பல கல்வெட்டுகளை படிச்சேன். அதுமூலமாகத்தான் ராஜராஜனை விட கிருஷ்ணன்ராமன் என்னை அதிகமாக ஈர்த்தான்.

கிருஷ்ணன்ராமன் யார்? அவன் பிரம்மராயன். ராஜராஜனோட சேனாதிபதி. ஒரு பிராமணன் எப்படி சேனாதிபதியாக இருந்திருக்க முடியும்னு எனக்குள்ளே ஒரு ஆச்சரியம். அவனது சொந்த ஊரான அமண்குடியை தேடி போனேன். அங்கே அற்புதமான காளி கோவில் இருக்கு. அது அவன் கட்டின அந்த கோவிலை நான் ரசிச்சிட்டு இருந்தப்போ. 90 வயசு கிழவர் ஒருத்தர் அப்படியே நின்னு என்னை பார்த்துக்கிட்டு இருந்தார். இத்தனை நாளாச்சு வர்றதுக்கு? என்று அவர் கேட்டவுடன் ஒரு நிமிஷம் எனக்கு வயிறு கலங்கிடுச்சு. அந்த கிழவர் அப்படியே நடந்து கருங்கல் கூடத்துக்குள்ளே புகுந்து போய்ட்டார். அந்த நிமிசத்துலதான் சோழனைப்பத்தி எழுதணும்னு முடிவு பண்ணினேன். அப்பவும்கூட என் மனசுக்கு உறுதியா தோணுச்சு! அவனை பத்தி தகவல்கள் சேகரிக்க ஆரம்பிச்சேன்.

சோழதேசம் மீது மாறா பாசம் எனக்கு, உண்மைதான். அதுக்கு காரணம் இருக்கு. கிருஷ்ணராமனை பற்றி நான் திரட்டின தகவல்கள் மூலமாக ராஜராஜனை பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுகிட்டேன். ராஜராஜன் எப்படி இருப்பான் பெரிய கொண்டை ஒல்லி உடம்பு மீசை கொஞ்சூண்டு தாடி….இதுதான் ராஜராஜான்னு ஓவியங்கள் அடையாளம் காமிச்சுது. அவன் வடித்த கல்வெட்டுகள் மூலமாக அவனோட மனசை பத்தி தெரிஞ்சுகிட்டேன்.

பஞ்சவன்மாதேவி யார்?  பஞ்சவன்மாதேவி ராஜராஜனோட துணைவி ஆனால் அவள் எப்படிப்பட்டவளாக இருந்திருந்தால் ராஜராஜனின் மகன் ராஜேந்திரன் தன் தாய் அல்லாத அவளுக்கு பள்ளிப்படை கோவில் எழுப்பியிருப்பான்? இந்த அடிப்படியில் அவளும் முக்கியம்தான்  என்று எண்ணினேன். சோழ  தேசத்தின் மீது எனக்கு காதல் வர ராஜராஜனும் ஒரு காரணம்.  ஒவ்வொரு ஊராய் போய் சோழர்கள் பத்தின விவரங்களை தேட ஆரம்பிச்சேன் சேர்த்து வச்ச பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவு பண்ணினேன் அப்பதான் புரிஞ்சுது சோழ  தேசத்து மேல எனக்கு இருக்கிறது காதல் இல்ல வெறி.

உடையார் படைக்க  சற்று தாமதம் ஏனெனில் அது ஒரு எழுத்தாளனுக்கு உள்ளே நிரம்பணும், எனக்குள்ள நிரம்புனது போதுமானதா எனக்கு தெரியலை. ஒவ்வொரு தடவை தகவல்களை தேடி போற போதும் புதுசு புதுசா கிடைக்குதே அப்புறம் எப்போ நிரம்புறது. ஆனாலும் ராஜராஜனை பத்தி சேர்த்து வைச்சதை மனப்பாடம்  பண்ணினதை எதுலயாவது பதிவு பண்ணிடணும்னு  ஆசைப்பட்டேன். உருவாக்கினேன்.

உடையாரை பொறுத்தவரைக்கும் முதல் வரியிலே கதையும் துவங்குது வரலாறும் துவங்குது. அது அப்படித்தான். ராஜேந்திர சோழனுக்காக கங்கை கரை வரைக்கும் போயிட்டு வந்திருக்கேன். ராஜராஜன் மரணச்செய்தி எழுதறப்போ குலுங்கி குலுங்கி அழுதிருக்கேன்.

உடையார் வெறும் நாவல் இல்லை. தமிழகத்தினுடைய  வரலாற்று  பதிவும் இல்லை. கடவுள் நூல். ராஜராஜனின் உள்மன அலசல். இதை யாருமே மக்களுக்கு சொல்லலை.  நான் உடையார் மூலம் சொல்லியிருக்கேன்.

இதைப்போன்ற புத்தகங்கள்

error: Content is protected !!