உள்ளங்கையில் மலர்களை ஏந்தி அவற்றில் மனம் செலுத்தி அதை வியந்து கவனித்து அது எப்படி ஒரு பிரதிமையில் விழுகிறதோ அது போல தன் மனமும் அங்கிங்கெனாத சக்தியிடம் விழட்டும் என நினைக்க சத்சங்கத்தினருக்கு உணர்த்தியிருக்கிறேன். இது ஒரு பயிற்சி. மனதை ஒரு புள்ளிக்கு கொண்டு வருதல் எளிதல்ல ஒரு வட்டத்துக்கு முதலில் கொண்டு வர அவர் முயற்சிக்க வேண்டும்.

நிலவு பார்க்க சூரியனில் நனைய வெளிச்சம் வியக்க காற்று அனுபவிக்க நீரினை மட்டும் அருந்த அவர்கள் முயல்கிறார்கள். இது ஓம் என்ற சப்தத்தோடு நிகழ வேண்டும். எதற்கிது. தெளிவாக வாழ….. மலை கடல் புல்வெளி வானம் எல்லா புற வடிவையும் தாண்டி அவைகளை உணர… உன்னை உணர்தல் எளிது. எங்கோ சொருகிக்கிடக்கிற அது வெளிவரும். இதுவே தரிசனம்.

பெரிய கும்பல் பூஜையில் சேராதீர்கள். குருகுலம் சிறியது. கட்டளைகள் புரியாவிட்டாலும் சத்சங்கத்தினர் மீற மாட்டார்கள்.

வேண்டுமென்றே சுண்டைக்காய் வற்றல் குழம்பு தோசை விள்ளல் என்றால் என்ன செய்வேன். சரி போ. அது உன் கர்மா இழுக்கிறது. நான் உனக்கு உதவ முடியாது. கோபம் வருகிறதா. இழப்பு எனக்கல்ல. கோபிக்க தூண்டுகிறார்களா? துஷ்டர்கள். ஓநாய்கள். அப்பா நல்லது கிடைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.