நானமர்ந்த இடத்தில் நாகம் நிறுத்து
குதித்த கிணறில் பெண்கள் சிலைகள்
என்னுயிர் நினைவாய் நடுகல் இடட்டும்
நடுகல் சரஸ்வதி நாகம் பார்வதி
பொற்சிலை எடுத்து அருகே நிறுத்து
அதுவே லக்ஷ்மி பணவரம் தருபவள்
இன்றுமுள்ளது அது போல் கோவில்
மயிலையோரம் முண்டகக்கண்ணி

அரும்பெறும் கோவில் அழகிய கோவில்
கோவில் சிறியது கீர்த்தி பெரியது
பால் குடம் ஆயிரம் ஆடியில் வருவது
குழந்தை வரமது கேட்டு வரலாம்
வந்த குழந்தை வளரக் கேட்கலாம்
வளர்ந்த குழந்தை படிக்க வரலாம்
படிப்பு வரவே சிறக்க கேட்கலாம்
சிறக்க கேட்டால் சீர்மணம் வரலாம்
சீர்மணம் வரவே மறுபடி குழந்தை
வரமும் கேட்கலாம் தொடர்கதையிதுவே

வாழ்க்கை உருண்டது சக்கரம் போலே
அவள் இங்கேயிருப்பாள் அச்சாணியாக
என்ன வேண்டும் அவளிடம் கேளீர்
எதிரியை மிரட்ட அவளே உதவி
பகைகள் மடிய அவளே உறுதி
செல்வம் பெறுக பொற்சிலை வணங்கு
படிப்பு வளர நடுகல் இடமே
உன்னை காக்க தனித்தொரு நாகம்
நெய்விளக்கேற்றி வேண்டுதல் சொல்வீர்
பால் தலை ஊற்றி பணிந்து நிற்பீர்

நடக்கும் போது இடித்துப் போகும்
பெண்ணை உணர்வீர் நிச்சயமாக
நற்குணம் இருப்பின் தொடுதல் உணர்வீர்
மனம் கனிந்திருப்பின் தனித்த காற்று
முகத்தில் மோதும் கடல் நீர் சேர்த்து
பக்தி இருப்பின் மனதுக்குள்ளே
அற்புதமாக அவள் முகம் தெரியும்

-தொடரும்