Loading...

Category Archives: முகநூல் பதிவுகள்

பொங்கல்

என்னிடம் மாடுமில்லை மண்ணுமில்லை. ஆனாலும் பொங்கல் உண்டு. அது கதிரவன் வழிபாடு. ஆதித்யம் ஹ்ருதயம் புண்யம் சர்வ சத்ரு விநாசநம்…..நோயே சத்ரு. கதிரே மருந்து. இரண்டு கரும்புகள் வாங்கி ஒரு சிறிய துண்டும் உண்ணமாட்டோம். பிடிக்காது. சர்க்கரை, வெண் பொங்கல்...

மேலும் படிக்க →

பண்டிகை

இனி தொடர்ச்சியாய் பண்டிகைகள்தான். பண்டிகைகளில் பட்டும் படாமலும் இருக்க வேண்டும். பிள்ளையார் வாங்குவது குழந்தைகளுக்காக. என் வீட்டில் குழந்தைகள் இல்லை. வாங்கி பெவிகால் உதவியோடு இரவு இரண்டு மணிக்கு கண்கள் வைத்தேன். வேறு எவருமில்லையே. பிறகு மனம் பார்க்க துவங்கியாயிற்று....

மேலும் படிக்க →

பிரசாதம்

முகநூல் நண்பர் மகா மகி வந்திருந்தார். ஒரு இரண்டு லிட்டர் கங்காஜலம். கால பைரவப் பிரசாதங்கள் கங்கணக் கயிறுகள். அன்று எதனாலோ வீடு நிறைய மனிதர்கள் சகலருக்கும் கங்கண கயிறு தந்தேன். மகாமகி கல்லுடைக்கும் இடத்தில் மேற்பார்வையாளர். மனம் மிருதுவாக...

மேலும் படிக்க →

தீபாவளி

[Nov 1, 2013 – முகநூல் பதிவிலிருந்து] மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்தியா வளர்ந்திருக்கிறது. என் இளம் வயதில் (1963) தீபாவளி பிராமண பண்டிகையாய் இருந்தது. அல்லாதவர் தோசைக்கறியோடு முடித்து கொள்வார்கள். உடை முக்யமேயில்லை. ஆனால் இன்று...

மேலும் படிக்க →

நியதி

இந்த முறை பூஜை படு அமர்க்களமாக நடந்து முடிந்தது. என் ஈடுபாடு பற்றி கவனியாமல் மற்றவரை கவனித்து வந்தேன். கடவுள் நம்பிக்கை அடிப்படையில் இக்கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பிறகு கடவுள் மறந்து கொண்டாட்ட நியதிகள் மட்டும் கவனம் பெறுகின்றன. யோசித்துப் பார்த்தால்...

மேலும் படிக்க →

நாத்திகம்

வழக்கம் போல் உறக்கமில்லை. நாத்திகமென்பது எதிர்மறை சிந்தனை, திமிர் , உறண்டை வம்புக்கிழுப்பது என வெளிபடும் போது நோய்த் தன்மை பெறுகிறது. தேடித் தேடி …. கடவுள் இல்லையெனத் தெரிந்து விட்டால் அப்புத்தி கூர்மையாகப் பேசும். ஆசையே வியாதிக்குக் காரணம்...

மேலும் படிக்க →

எழுபத்தி இரண்டு

குருப்யோ நம: கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. வரிசையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பெரியாளயிட்டப்பா என் வயதுடையோர் மெல்லியதாக பொறாமையோடு அங்கீகரிக்கிறார்கள். ஆனால் என் இருபது வயதில் நான் எதற்கும் லாயக்கில்லாதவன். உண்பதற்கு அமரும்போது என் தகப்பன் என்னை...

மேலும் படிக்க →

எழுத்து

எனக்கு ஆன்மீக வித்தை எதுவும் தெரியாது. என் குண்டலினியை ஏற்றி விடுங்கள் என்று கேட்கிறார்கள். நான் செய்வதறியேன். நான் எழுதப் பணிக்கப் பட்டிருக்கிறேன். “பால்குமார் ஈஸ் மை பென்” என்று கெளரவிக்கப்பட்டுருக்கிறேன். மேலும் சிலது சொல்லப்பட்டிருக்கிறது. என் எழுத்தின் கனம்...

மேலும் படிக்க →

சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம், முகநூலை தகவல் பரிமாறும் தளமாக பயன்படுத்த நினைக்கிறேன். பெரிய புத்தகம் போல எழுத வேண்டிய விடயத்திற்கு முன்தகவலாக பேசுகிறேன். அவசியமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். பலர்நேரில் சந்திக்க ஆவல் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு காரணம் சொல்லத் தெரியவில்லை. உங்க ஆசிர்வாதம்...

மேலும் படிக்க →

மயிலை அறுபத்து மூவர் – அன்னதானம்

அன்னதானம் என்பது மனித நாகரீகத்தின் உச்சம். வேறெந்த உயிரும் உணவு தானம் செய்வதில்லை. கூடித் தின்னும். தானம் வேறு. அன்னதான சிவன் பற்றி சொல்வார்கள். பொருள் தேடி ஏன் யாசகம் வாங்கி தினம் அன்னதானம். மனிதர்களில் சிலர் இதற்கிடையில் நீர்ப்...

மேலும் படிக்க →