Loading...

வரமாய் வந்த குரு

நமது வாழ்க்கையில் எவ்வொறு விஷயமும் ஒருவர் சொல்லிக்கொடுத்துதான் பழகிருக்கிறோம். பல்தேய்ப்பது, குளிப்பது, உண்பது, தூங்குவது, படிப்பது, இப்படி எல்லா விஷயங்களிலும் நமக்கு விதவிதமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் அந்த ஆசிரியர்கள் தகப்பனாகவோ தாயாகவோ அல்லது பள்ளிக்கூடத்து ஆசனாகவோ இருக்கிறார்கள். நாம் அம்மாதிரியான விஷயங்களை மற்றவர்களிடம் கற்று கொள்வது போல, வாழ்க்கை என்பது என்ன? பிரபஞ்சம் எத்தகையது? கடவுள் இருக்கிறாரா? இல்லையா? அவரை காணமுடியுமா? முடியாதா? என்ற உயர்ந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்ல நமக்கு கற்றுத்தர ஒருவர் இருக்கிறார். பல்தேய்ப்பது எப்படி சொல்லிக்கொடுக்கப்பட்டதோ அதே போல, கடவுள் என்பது பற்றியும் நமக்கு சொல்லித்தர ஒருவர் உண்டு. அவருக்கு குரு என்று பெயர். குரு என்ற சொல்லிற்கு அர்த்தம் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து போதல்.

யோகி ராம்சுரத்குமார் கங்கை கரை ஓரமுள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரைஅவர் தாய் கிணற்றில் நீர் எடுத்து வர சொன்னபோது கிணற்று விளிம்பில் ஒரு குருவி உட்கார்ந்திருக்க, பறவையை விரட்ட கயிறு வீச எதேச்சையாக கயிறு பட்டு பறவை இறந்து போயிற்று. சிறுவனாக இருந்த யோகி ராம்சுரத்குமார் வினாடி நேரத்தில் கொலை செய்துவிட்டோமே எந்த திட்டமும் இன்றி மரணம் நேர்ந்து விட்டதே என்று பதைத்தார். இந்த சம்பவம் அவர் மனதில் ஆழ விழுந்து விருட்சமாகி அவரை இல்வாழ்க்கையை விட்டு வெளியேற வைத்தது. ஒரு குருவை தேட வைத்தது.

வாழ்க்கை என்பது என்ன? அது ஏன் இவ்வளவு நிலையின்றி இருக்கிறது? அப்பொழுது நிலை பெற்றது எது? என்ற கேள்விகளோடு பாரத தேசம் முழுவதும் அலைந்து அரவிந்தரையும், பகவான் ஸ்ரீ ரமணரையும், கேரளாவிலுள்ள காஸர்கோடு என்ற இடத்தில வாழ்ந்து வந்த பப்பா ராமதாஸ் என்பவரை அணுகி அவர்கள் மூலம் உள் உவகை பெற்று ராமநாப தீக்ஷை பெற்று ராமநாபம் இடைவிடாது சொல்வதே வாழ்க்கையின் இலட்சியமாக அந்த ராமநாமம் இடைவிடாது சொன்னதால் கடவுள் தரிசனம் பெற்று தானும் ஒரு குருவாகி திருவண்ணாமலையில் வந்தமர்ந்தார்.

பகவான் ஸ்ரீ ரமணரின் ஆஸ்ரமத்திற்கு எதிரே உள்ள திருவண்ணாமலை அக்ரஹார கொல்லையில் மிக பெரிய ஆஸ்ரமம் நிறுவி ஆத்ம போதம் பரப்பி வருகிறார்.

கடவுள் என்ற மகாசக்தியை தகப்பன் என்று அழைக்கின்றார் யோகி ராம்சுரத்குமார். அந்த சக்தியை தவிர இவ்வுலகத்தில் வேறு எவரும் இல்லை. எதுவும் இல்லை இது நிச்சயம் என்பது அவரின் ஆழமான கருத்து.

இடைவிடாது ராமநாமம் சொல்பவராக இருப்பினும் மதம் தாண்டிய மஹான் அவர். அவரின் அண்மை பலபேரை திகைக்க வைத்திருக்கிறது. தனக்குள் பார்க்கின்ற ஆவலைத் தூண்டிருக்கிறது. இனம்புரியாத அமைதியை ஏற்படுத்திருக்கிறது. அடக்கமான பேச்சு அமைதியான வாழ்வு என்பதை சூட்சமமாக சொல்லி தருகிற யோகி ராம்சுரத்குமார் அவர்கள் இறை மீது உள்ள நம்பிக்கையை ஒரு பொழுதும் இழக்கலாகாது என்றும் சொல்லி வருகிறார்.

பக்தர்களின் அன்பினால் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் உருவான அந்த ஆசிரமம் தனித்த ஒரு தெய்வீக தன்மையோடு விளங்கி வருகிறது. மிக நல்ல அதிர்வுகள் கொண்டு உள்ளே நுழைந்ததும் மனதில் ஒரு அமைதி பூக்கத் துவங்கிவிடுகிறது.

பொறுமையும் அமைதியும் தான் குருவால் சொல்லிக்கொடுக்கப்படுகின்ற முக்கியமான விஷயங்கள். இந்த இரண்டை கைக்கொண்டால்தான் அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் நல்ல நிலைக்கு வருகிறது . ஆரவாரங்களை மெல்ல மெல்ல குறைத்து, பேச்சு வேகத்தை மட்டுப்படுத்தி, கண்மூடி அமர்தலை வழக்கமாக்கி கொண்டு எது பற்றியும் நிதானமாய் யோசிப்பதும், பார்ப்பதும் உங்கள் வாழ்வின் அடிப்படையை பலமாக்கும். இந்த பொறுமையும் நிதானமும் மகான்களின் அண்மையில் ஏற்படும் அதிர்வினால் நமக்கு நிச்சயம் கிடைக்கும். ஆரவாரமும் அதிகாரமும் தான் நமது வாழ்க்கையை சிக்கலாக்குகின்றன என்ற உண்மையை மகான்களின் சன்னிதானத்தில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். ஒருமுறை உத்தமமான மகானை சந்தித்தால் போதும் வாழ்க்கை வளமாகிடும். மனம் தெளிவாகி விடும்.

என்னுடைய வாழ்வில் குரு அருளால் ஏற்பட்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னுடைய இளம்வயதில் குரு வேண்டும் என்கிற தாபத்தோடு நான் அதிகம் அலைந்தேன். பலபேரை கேட்டேன் ஆனால் என்னுடைய நாற்பத்தி ஐந்தாவது வயதில் தான் என்னால் என் குருவை சந்திக்க முடிந்தது. திருவண்ணாமலை மஹான் கடவுளின் குழந்தை அடியாருக்கு நல்லான் எங்கள் சத்குருநாதன் யோகி ராம்சுரத்குமாரை அவர்களை நேரடியாக சந்தித்தேன். வெறும் தத்துவ விஷயம் மட்டும் இல்லை என் நண்பர்களே என் மனைவி கமலா அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாத பொது Brain Fever என்ற விஷயத்தில் அவர் சிக்கி கொண்டு அவஸ்தை படும் போது அவர் அநேகமாக இறந்து விடுவார் அல்லது பிழைத்துக்கொண்டாலும் ஒரு காய்கறியை போல இருப்பார் என்று டாக்டர்கள் சொல்ல யோகி ராம்சுரத்குமார் மிக தெள்ள தெளிவாக சொன்னார்

“Kamala will walk, Kamala will run”

கடைசி வரை மருத்துவர்கள் அவளை பற்றி சந்தேகமாக இருக்க எந்த சந்தேகமும் இல்லாமல் அவர் இந்த விஷயத்தை சொன்னார். இது ஜோசியம் அல்ல அவருடைய செயல் அவருடைய உத்வேகம், அவருடைய பலம், அதனால் கமலா எழுந்து நின்று மிக சந்தோசமாக, மிக நிறைவாக, மிக சுறுசுறுப்பாக தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நான் இன்று மிக சிறந்த எழுத்தாளனாக இருப்பதற்கு காரணம் என்னுடைய குருநாதர்,

“Balkumar is my pen. whatever balkumar writes will be remembered here long long time.” “If at all any rebirth this beggar be like with Balkumar”

என்ற ஒரு அற்புதமான வார்த்தையை சொன்னார் அதன் நிஜ பொருள் எனக்கு தெரியவில்லை ஆயினும் அவர் என்னை தன் மனதுக்கு நெருங்கியவராக எடுத்துக்கொண்டார். என்னுள் பல மாற்றங்கள் நிகழ்ந்தன, என் மனோ பலம் கூடியது, நான் ஒருமைப்படுவது அதிகரித்தது, என் மனம் ஒருமைப்படுவதன் மூலம் சில நல்ல காரியங்களை எளிதாக செய்ய முடிந்தது. என்னுடைய இளம் வயதில் சரியாக பேசத்தெரியாது யார் என்ன என்று அறிந்து கொள்ள தெரியாது கற்பனையில் லயித்து கொண்டு இருப்பேன் நானாக எதாவது நினைத்து கொண்டிருப்பேன் .

இதை இந்நேரம் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள, செய்தியை அறிந்து கொள்ள நான் யார் என்பதை அறிந்து கொள்ள எதிரே இருப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ள அவர் எனக்கு உதவி செய்தார். அவர் கொடுத்த விழிப்பு அவர் கொடுத்த alertness அவர் கொடுத்த வேகம் உத்வேகம் என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்த நிலை உங்களுக்கும் வர வேண்டும் அவரை கெட்டியாக பற்றி கொள்ள வேண்டும். அவர் நேரடியாக இந்த பூமியில் இல்லை என்றாலும் சித்தி ஆகிவிட்டாலும் சூட்சம ரூபத்தில் இன்னும் பலம் பொருந்தியவராக இன்னும் வேகம் கொண்டவராக இருப்பதை நான் உணர்கிறேன். உங்களாலும் உணரமுடியும் .
பலபேர் பலவிஷயங்களை கேட்டு பயன் பெற்றிருக்கிறார்கள் ஆனால் என்னுடைய கேள்வி கடவுளை காட்டுவதாக இருந்தது, கடவுளை காட்டுவதா அது எளிதா எனினும் இந்த பிச்சைக்காரன் முயற்சிக்கிறான் என்று அவர் சொன்னார் . அவர் தன்னை பிச்சைக்காரன் என்றுதான் சொல்லிக்கொள்வார்.ஒரு மனிதனை நேரே பார்ப்பது போல நான் என் குருநாதரை நேரே பார்ப்பது போல என் முதுகில் கை வைத்து இடுப்பில் கை வைத்து என் தலையை தடவி வேற ஒரு விஷயம் உணர்த்தினார் இறைவன் என்ற விஷயம் வெளியே சூலமாக இல்லை,உள்ளே ஒரு சக்தியாக இருக்கிறது அது உள்ளே ஒரு இருப்பாக இருக்கிறது. அது ஒரு தன்மையில் இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தினார். மனமார என் அகக்கண்ணார நான் கடவுளை தரிசித்தேன்.

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விற்கு என்னை உணர்த்தி அதுபோல் என்னை பலமுறை பரவச நிலைக்கு ஏற்படுத்தி எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் என்னை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்சென்று பல்வேறு தரிசனங்களை ஏற்படுத்தி அவர் செய்துவந்த வித்தையை என் மகன் உடைய உபநயனத்தின் போது உபநயனம் முழுவதும் உட்கார்ந்திருந்து அவராலேயே அந்த உபநயனம் நடத்தப்பட்டு அந்த உபநயனத்தின் முடிவாக நானும் என் மகளும் இனிமையாக அவரைப்பற்றி பாடல்கள் பாடி அந்த பாடல்கள் பாடுவதன் மூலமாக ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி அந்த சூழ்நிலையில் பலர் அறிய என்னை ஒரு பரவச நிலைக்கு ஆளாக்கினார். இடுப்பின் அடியிலிருந்து குண்டலினி உச்சிக்கு போய் சிதறி தெறித்து மிக வித்தியாசமான அனுபவம் நிகழ்ந்தன.வலது பக்கம் இருந்த திருவண்ணாமலை hollow வாக உள்ளே எதுவும் இல்லாது கவிழ்த்து வைத்த பாத்திரமாக என் கண்ணுக்கு தெரிந்தது. ஒரு நீல கலரில் இருந்தது அது அப்படித்தான் என்று அவர் எனக்கு விளக்கிச்சொன்னார். அந்த பரவசமான ஒரு நிலை என்னை இன்று வரை ஒரு உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

About Me

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Sequi tempora veritatis nemo aut ea iusto eos est expedita, quas ab adipisci.

இந்த பிச்சைக்காரன் புகழ் உலகம் முழுவதும் பரவும் என்று சொல்லிருக்கிறார் அது நடந்தேறி கொண்டிருப்பதை நாங்கள் உணர்க்கிறோம்.எனவே எங்கள் சத்குருநாதன் பெயரை உச்சரிக்க வேண்டும்.

யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுருராய

என்பது தான் அந்த வாக்கியம். அவர் அதிகம் ஒன்றும் சொல்லவில்லை என் பெயரை இடையறாது சொல்லிக்கொண்டிரு அல்லது எப்பொழுது பிரச்சனை வருகிறதோ அப்பொழுது சொல்ல உன் பிரச்னையை என் தகப்பன் தீர்ப்பான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.யோகி ராம்சுரத்குமார் நாமம் வாழ்க என்று சொல்லி அவரை கெட்டியாக பற்றிக்கொள்ளுங்கள் இந்த கலி காலத்தில் பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஒரே ஒரு சூட்சம ரூபம் அவரே என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன் .

பகவானோடு சில அனுபவங்கள்

சரியாக நினைவில்லை. எண்பத்தி ஒன்பதோ தொன்னூறோ….அதற்கு முன்பு பகவானை மூன்று முறை நான் சந்தித்திருக்கிறேன்.இந்த முறை கார்த்திகை தீபம் பார்க்க என்று வந்து திருவண்ணாமலை நுழைவதற்கு முன்னால் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினேன்.குழந்தைகள் லாட்ஜில் கமலாவோடு இருக்க நானும் சாந்தாவும் யோகியை பார்க்க போனோம்.எப்பொழுது பார்க்க வரலாம் என கேட்கப் போனோம்.நீ என்ன வருவது நான் வருகிறேன் உன் இடத்திற்கு என்று என் கையை பிடித்துக் கொண்டு லேசாய் மழை தூறிய தெருவில் நடக்க ஆரம்பித்து விட்டார்.பகவான் நம்ம வீட்டுக்கு வர்ரார் நம்ம வீட்டுக்கு வர்ரார் என்று சாந்தா குதித்தாள்.அறைக்குள் நுழைய சகலருக்கும் ஒரே சந்தோஷம். அவருக்கு கொண்டு வந்த பொருட்களை கொடுக்க அவைகளை தடவி அந்தப் பையை ஓரம் வைத்து விட்டார்.

அவர் வருகையைப் பார்த்து அந்த ஓட்டலின் அதிபர் வந்தார்.அவர் குடும்பத்தினரும் வந்து அறைவாசலில் நின்று கொண்டார்கள்.ஓட்டல் அதிபர் ஒரே ஒரு காஃபி டபரா டம்ளரில் பகவானுக்கு கொண்டு வந்து தர இங்குள்ள எல்லோருக்கும் கொடுத்தால்தான் சாப்பிடுவேன் என்று எங்களை கை காட்டினார்.ஒரு ஜக்கில் காஃபி வந்தது. சிறிது நேரம் கையில் வைத்திருந்து எங்களை பகிர்ந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். மீதி காஃபி இருந்தது. அதை ஓட்டல் அதிபருக்கு கொடுத்து விட்டார்.

 

மலை உச்சியில் விளக்கு ஏற்றும் நேரம் வந்தது. மேகங்கள் மலை உச்சியை மறைத்திருந்தன.எல்லோரும் கவலைப்பட்டார்கள்.இன்னும் ஐந்து நிமிடம் தானே இருக்கு.ஒன்னும் தெரியாதே என்று கவலைப்பட்டார்கள்.என் தோளை பற்றிய வண்ணம் பகவான் மலையையே பார்த்துக் கொண்டிருந்தார். மேகங்கள் விடைபெறும் விருந்தினர் போல தயங்கி விலகின.கீழ் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.உச்சி தெரிந்தது.மலை தீபம் ஏற்றப்பட்டது. ஒளியை கவனி See the light என்று பகவான் கூறினார்.நான் கவனித்தேன்.மாற்றம் ஏதும் இல்லை.என் கைககளை பற்றிக் கொண்டே அந்த மேல்மாடியில் பல பக்கங்கள் நின்றார்.நான் கட்டளை இடும்போது என் இடத்திற்கு வரலாம் பால்குமார்.இரவு சுகமாய் தூங்கிவிட்டு காலையில் ஊருக்கு போ.எங்களுக்கு பிராயண அலுப்பு.நன்றாக தூங்கினோம்.விடிந்த பிறகு ஊருக்கு திரும்பினோம்.நாங்கள் பார்த்த முதல் தீபம் அது.அடுத்த தீபத்திற்கு வேறு ஒரு வேடிக்கை நடந்தது.

‌இந்தப் படம் அறைக்குள் அவரோடு இருக்க எடுத்தது.

-தொடரும்